News

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவை சமர்ப்பித்தது இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபையானது (CEB), 2026 ஆம் ஆண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.  

அதில் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, இந்த முன்மொழிவு 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணங்களை உள்ளடக்கியுள்ளது. 

அத்துடன் இது வீடுகள், சமய இடங்கள், கைத்தொழில், வர்த்தகம் மற்றும் ஏனைய நுகர்வோர் பிரிவுகளுக்கான மின் அலகு கட்டணங்கள் (Energy charges) மற்றும் நிலையான மாதாந்தக் கட்டணங்களில் (Fixed monthly charges) திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது.


இந்த முன்மொழிவின் கீழ், வீட்டு உபயோக மின் நுகர்வோர் அனைத்து நுகர்வு மட்டங்களிலும் (Consumption blocks) அலகு விகிதங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் ஆகிய இரண்டிலும் அதிகரிப்பினை எதிர்கொள்ள நேரிடும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button