News
சுமார் நான்கரை கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட தனியார் விமான நிறுவன ஊழியர் கட்டுநாயக்கவில் கைது.

தனியார் விமான நிறுவன ஊழியர் ஒருவர், சுமார் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, குறித்த நபர் தங்கப் பொருட்களை ஒரு பயணப் பையில் மறைத்து வைத்து, விமான நிலைய ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட வெளியேறும் வாயில் வழியாகச் செல்ல முயன்றுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்தப் பையைச் சோதனையிட்டபோது, 1 கிலோகிராம் 163 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



