News

அரச நிர்வாகக் கட்டடம் தொடர்பாக பணம் பெற்றதாகக் கூறி, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் ; மிகிந்தலை ரஜமஹா விகாராதிபதி

மிகிந்தலை ரஜமஹா விகாராதிபதிக்கு எதிராக அச்சுறுத்தல்? 


மிகிந்தலை அரச நிர்வாகக் கட்டடம் தொடர்பாக பணம் பெற்றதாகக் கூறி, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி
கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.


இன்று (04) காலை தனது சாரதியுடன் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மிஹிந்தலை புண்ணிய பூமிக்குச் சொந்தமான அரச நிர்வாகக் கட்டடம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் அடிப்படையில், மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி  கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரரின் சாரதி, இன்று (04) அனுராதபுரம் பொலிஸின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


அனுராதபுரம் பொலிஸார் பிறப்பித்த உத்தரவுக்கமைய, சாரதியை பொலிஸில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்த தேரர், தன்னையும் கைது செய்யும் ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button