News

குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்த நிலையில், அந்த நபரும் அவரது மகளும், மனைவியும் உயிரிழப்பு #அனுராதபுரம்

அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் இன்று இடம்பெற்ற வீடமைப்புத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.


காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டிற்குத் தீ வைத்துள்ளார். 


இந்தச் சம்பவத்தில் அந்த நபரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 


இருப்பினும், சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழந்துள்ளதோடு, ஏனைய பிள்ளைகள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலன்பிந்துனுவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button