News
சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருட்களுடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் மூன்று இந்தியப் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 50 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்



