7 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை எவ்வித டெண்டரும் இன்றி அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு !!

2000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 20 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை எவ்விதமான விலைமனு கோரல்கள் இன்றி அரசுக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நேற்று 07.01.2025 பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து பாராளுமன்றில் இது விடயமாக தகவல் வெளியிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு 47 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிக்க அப்போதய கோத்தாபய ராஜபக்ஷ அரசு முன்வொழிவுகளை கோரியிருந்த நிலையில் 533 திடட யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அப்போது ஏற்பட்ட மெருக்கடிகள் காரணமாக குறித்த திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இந்த அரசு இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்து கடந்த 2025 நவம்பர் மாதம் வலு சக்தி அமைச்சின் செயலாளர் முன்னதாக முன்மொழியப்பட்ட திட்டங்களில் 7 க்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகார சபைக்கு அறிவிறுத்தல் வழங்கியுள்ளார் என சுட்டிக்கட்டிய அவர் ,
ஓட்டமாவடி,நிலாவெளி, கல்பிட்டி யாழ்பானம் உள்ளிட்ட 7 பிரதேசங்களில் சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க 7 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்கட்டினார்.
இவை அனைத்து எவ்வித விலை மனுக்கோரல் கோரப்படாமல் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் ஆகும். விலை மனு கோரப்படாமல் எவ்வித டெண்டர்களையும் வழங்கவுதில்லை என தீர்மானம் ஒன்றை எடுத்துள்ள நிலையிலே இந்த டெண்டர்களை அரசு வழங்கியள்ளதாக அவர் சுட்டிக்கட்டினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
“ 17 மெகாவொட் திட்டம் ஒன்றுக்கு யுனிட் ஒன்றுக்கு 17 ரூபாய் வீதம் கொள்வனவு செய்ய ஒப்பந்த செய்திருந்த இதே அரசு இந்த முறை 100 மெகாவொட் மின்சாரத்தை 18 ரூபா வீதம் கொள்வனவு செய்ய இணங்கியுள்ளது.மேலும் இதற்கு முன்னர் 50 மெகாவொட் காற்றாலை மின் நிலையம் ஒன்றுக்கு 11.80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அனுமதி வழங்கிய அரசு இம்முறை 20 ரூபாவுக்கு யுனிட் ஒன்றை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.இந்த கமிஷன்கள் யாருக்கு செல்கிறது என நாம் கேட்க விரும்புகிறோம்.
அதிக விலை கொடுத்து கொள்வனவு மின்சாரம் செய்வதினால் அரசுக்கு 20 ஆண்டுகளுக்கு 2000 கோடி இழப்பு ஏற்படும் என தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. டெண்டர் இல்லாமல் வழங்கப்பட்ட திட்டத்தில் 2000 கோடி யாருக்கு இது செல்கிறது என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
தற்போது டெண்டர் இல்லாமல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிறுனங்களில் பிரபலமான முன்னாள் கிரிக்கட் வீரர்களின் இருவரின் கம்பனிகளும் அடங்கும் என சுட்டிக்கட்டிய அவர் , குறித்த இரண்டு முன்னாள் கிரிக்கட் வீரர்களும் ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரை வர்ணித்து வெய்ஸ் கட் வழங்கியவர்கள் எனவும் அவர்கள் நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் என்பதால் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த தான் விரும்பவில்லை என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மேலும் சர்வதேச மட்டத்தில் பிரசித்து பெற்ற குறித்த இரண்டு முன்னள் கிரிக்கட் வீரர்களும் ஜனாதிபதியின் பின்னால் கிளீன் ஶ்ரீலங்கா போன்ற நிகழ்சிகளுக்கு சென்று வொய்ஸ் கட் கொடுத்தது டெண்டர் இல்லாமல் வர்த்தகம் செய்யவா ? என நான் கேட்கவிரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார்.
தற்போதய மின் வலு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி முன்னதாக பணியாற்றிய நெம் நிறுவனம் அண்மையில் கொள்வனவு செய்த தெரிவு பட்டியலில் இல்லாத ப்ளூ சன் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 76 வருடங்களில் இடம்பெற்ற மோசடிகளை விட அதிகமான மோசடி இந்த அரசு காலத்தில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தினார்.



