News

NPP சபைத் தலைவர் கிராம மக்களால் கூச்சலிட்டு (ஹூ சத்தம் எழுப்பி) துரத்தியடிப்பு !!

மாத்தளை பிரதேச சபைத் தலைவருக்கு கிராம மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாத்தளை, அக்குரந்தெனிய பகுதியில் அமைந்துள்ள கோழி பண்ணை ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சென்றிருந்த போதே, பிரதேச சபைத் தலைவர் இந்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார்.

தலைவர் அந்த இடத்திலிருந்து வெளியேறும் வரை அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டு (ஹூ சத்தம் எழுப்பி) தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதேச சபைத் தலைவர் குறிப்பிடுகிறார்.

கோழி பண்ணையின் கழிவுகள் காரணமாக ஈக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், இதனால் தாம் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

Recent Articles

Back to top button