20 இலட்சம் கடனை திருப்பிக்கொடுக்காததால் NPP எம்பியின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க தயாராகும் பௌத்த தேரர்

சிங்கள தேசப்பற்றை மையமாகக் கொண்ட அரசியல் கட்சியொன்றின் மூலம் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தேரர், தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார்.
தேர்தல் முடிந்தவுடன் இப்பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அது வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (தேரர்), தற்போது குறித்த எம்.பி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
தென்னிலகத்தைச் சேர்ந்த இந்தத் தேரர், அடிக்கடி கட்சி மாறும் குணத்தினால் ஒரு குறிப்பிட்ட பட்டப்பெயராலும் அழைக்கப்படுபவர்.
பணம் பெற்றுக் கொண்ட திசைகாட்டி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தனக்குரிய பணத்தை உடனடியாகத் திருப்பித் தராவிட்டால், அந்த பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியான உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர், தேரரின் இந்த மிரட்டலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.CN



