கொவிட் ஜனாஸா எரிப்பு , பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க குழு நியமிக்கப்படும் : ஜனாதிபதி
தனிநபர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள்,
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய இன்னல்கள், குறிப்பாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக உரையாற்றினார்.
தமது மத நம்பிக்கைகளின் படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு ஏற்பட்ட வலிகள் மற்றும் துன்பங்களுக்கு ஜனாதிபதி வருத்தம் தெரிவித்தார்.
கட்டாயமாக தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.