News

புறா வளர்ப்பு சண்டையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – குத்தியவரும் காயங்களுடன் வைத்தியாசலையில் அனுமதி

பேலியகொடை, மீகஹவத்த பகுதியில் நேற்று (18) பிற்பகல் புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், அங்கு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் வத்தளை, ஓலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button