News

நாட்டுக்குள் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 40 வயது நபர், 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சிக்கிய சம்பவம் பதிவு #குருநாகல் மாவட்டம்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதானவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.



வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருடன், குறித்த சந்தேக நபர் தொலைபேசியூடாக தொடர்புகளைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இதனூடாக, சந்தேக நபர் நாட்டுக்குள் போதைப்பொருளை விற்பனை செய்து பணம் திரட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



அதன்படி சந்தேக நபரிடமிருந்து 28 கோடியே 33 இலட்சம் ரூபாய் பணமும், 02 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



சந்தேக நபரை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button