News
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி(NPP) உறுப்பினரை நிறுத்தி தா*க்குதல் நடத்திய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) மாநகர சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லங்காதீப பத்திரிகையின் செய்தியின்படி, ஸ்ரீலங்கா டெலிகொமில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரியும் குறித்த உறுப்பினர், நிறுவனத்திற்குச் சொந்தமான கேப் (cab) வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முச்சக்கரவண்டி சாரதி பாதையை மறித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, மாநகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு, மருதானை வீதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்பதோடு, அவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



