News

வத்தேகெதர அல் ஸபா பாடசாலையில் இன்று உத்தியோகபூர்வமாக  தரம் ஒன்று மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.!



அதிபரின் தலைமையில் தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் கோலாகலமாக வரவேற்றதுடன் இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக தற்போதைய கண்டி மாநகர சபை உறுப்பினரும் மற்றும் MHM TRADERS உரிமையாளருமான அல்ஹாஜ் M.H.M Anees Deen வருகை தந்ததுடன் கல்வி காரியாலயத்தில் இருந்து வளவாளர் சமீர் சார் அவர்களும் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக IOC நிறுவன முன்னால் சந்தைப்படுத்தல் முகாமையாளரும் City oil mart உரிமையாளருமான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் இர்ஷாட்‌ மற்றும் பழைய மாணவர் சங்க உப தலைவர் மற்றும் பொருளாளர் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் பற்றும் பாடசாலை ஆசிரியர் குலாம், பழைய மாணவர் மற்றும் பெற்றோர்கள்‌ நிகழ்வை சிறப்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வின் போது எமது பாடசாலையின் பேண்ட் வாத்திய குழு உத்தியோகபூர்வமாக இன்று தமது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்கள்.


இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

அதிபர்
01/29/2026

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button