News

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சஜித் வருகை

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் இடத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்துள்ளார்.



7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.



அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தில், இப் போராட்டம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக தீவிரமடைந்தது.



போராட்டக்காரர்களில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button