News

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர் யுவதிகள் தானாக முன்வந்து புனர்வாழ்வு பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபட்டது.

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தானாக முன்வந்து புனர்வாழ்வு பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று வெலிகந்தை சேனபுர புனர்வாழ்வு மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் தெரிவித்தார்.

இதற்கான மருந்துகள் உட்பட அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு 3 மாத கால புனர்வாழ்வின் பின்னர், அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்காகத் தொழில் ஒன்றினைச் செய்யத் தேவையான தொழில்முறைப் பயிற்சியும் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0769627761 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர் யுவதிகளை உடனடியாகப் புனர்வாழ்வு பெறுவதற்கு முன்வருமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button