News

“ஜனாதிபதி வழங்கிய காசோலைகள் ரிட்டர்னானமைக்கு அதிகாரிகளின் தவறே காரணம்.. அரசாங்கத்திடம் போதியளவு பணம் உள்ளது..”

சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கமளித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் வலியுறுத்தியதாவது:

• காசோலைகளை எழுதுவது உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அரச இயந்திரத்தின் ஊடாகவே நடைபெறுகின்றன.

• அங்கு ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

• காசோலைகள் மறுக்கப்படும் அளவுக்கு அரசாங்கத்திடம் எவ்வித நிதிப் பற்றாக்குறையும் இல்லை.

• நஷ்டஈடு வழங்கும் செயல்முறைக்குத் தேவையான அனைத்து நிதிகளும் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button