திஹாரியில் நடந்த மத்ரசா பட்டமளிப்புக்கு ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்து வந்ததற்கு உலமா கட்சி கடும் கண்டனம்

திஹாரியில் நடந்த மத்ரசா பட்டமளிப்புக்கு அ.இ. ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள் நாமல் ராஜபக்ஷவை பிரதம விருந்தினராக அழைத்து வந்தமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் நாம் மஹிந்தவை ஆதரித்தோம்.
ஆனால் எப்போது மஹிந்த தரப்பு ஞானசார தேரர், ரத்தன தேரர், கருணா போன்றோரை தலையில் தூக்கி வைத்து அவர்களின் முஸ்லிம் விரோத போக்குகளுக்கு இடம் கொடுத்ததால்தான் நாம் அடிக்கடி மஹிந்தவுடன் முரண்பட்டோம்.
2005 முதல் 2012ம் ஆண்டு வரை மஹிந்தவின் ஆட்சி நன்றாகத்தான் இருந்தது.
அதன்பின் நாட்டில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்
2012ல் பகிரங்கமாக நாம் மஹிந்த ஆதரவிலிருந்து விலகி பின்னர் தமிழ் கூட்டமைப்பும் ரணிலும் ஹக்கீமும் ரிசாதும் இணைந்து மைத்திரியை கொண்டு வந்ததால் மஹிந்தவை விட மைத்திரி மிக மோசமான பயல் என நாம் கூறி மீண்டும் மஹிந்தவை ஆதரித்தோம்.
அதே போல் மைத்திரி, ரணில் ஆட்சி மஹிந்த ஆட்சியை விட மோசமானதாக, திகன, கண்டி, மினுவாங்கொடை, காலி என முஸ்லிம்.சமூகம் தாக்கப்பட்டு கடைசியில் ஈஸ்டர் தாக்குதலும் நடந்தது.
மைத்திரியிடம் தோற்ற மஹிந்த தரப்பு இனி திருந்துவர் என எதிர்பார்த்து நாமும் 2019ல் மீண்டும் மஹிந்தவை ஆதரித்தோம்.
ஆனால் மஹிந்த தரப்பு திருந்தவில்லை, கோட்டாபய என்ற மோசமான ஆட்சியை கண்டோம்.
கோட்டாபய, மஹிந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆனாலும் மஹிந்த தரப்பு கட்சி இந்திய பீஜேபி இனவாத அரசியலை பின்பற்றுவதை தெளிவாக கண்டோம். மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிமனிதர் மற்றவர்களை அணுசரிக்கும் மனிதராக இருந்தாலும் அவரது கட்சியினர் மிகப்பெரும் இனவாதிகளாக இருந்தனர்.
இதற்கு ஒரேயொரு உதாரணம்தான் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை நிர்வாகத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதாகும். இதனை நாம் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொதுவாக எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியை முஸ்லிம்கள் எதிர்க்காமல் முடிந்தளவு அரசுக்கு ஆதரவான அரசியலை செய்ய வேண்டும் என்பதே உலமா கட்சியின் வழி காட்டலாகும். அதற்காக அரசுகளிடம் பதவிகள் பெற்று அடிமையாக இருக்க கூடாது.
இப்போது ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசு உள்ளது. அந்த அரசு ஓரளவு முன்னேற்றத்தை நோக்கி செல்லும் வேளையில் நாமல் ராஜபக்ஷ என்ற இனவாத கட்சியின் பிரதிநிதியை மதுரசா பட்டமளிப்புக்கு அதுவும் அ.ஜ. உலமா ஆயுட்கால தலைவர் ரிஸ்வி முப்தியுடன் சேர்த்து அழைத்து வந்தமை முட்டாள்தனமான செயலாகும். இச்செயலுக்காக சம்பந்தப்பட்ட மதுரசாவும், அ.இ.ஜ. உ சபை தலைவரும் சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
இலங்கை உலமா கட்சி.



