News

நாலந்தா ஆசிரியைகள், தலைமை மாணவருடன் முறையற்ற தொடர்புகளைப் பேணி, தகாத வீடியோக்கள் வெளியான சம்பவத்தில் இதுதான் தண்டனை..

கொழும்பு நாலந்தா கல்லூரியின் இரண்டு ஆசிரியைகள் பாடசாலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு, மாகாண கல்வி அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் தலைமை மாணவருடன் முறையற்ற தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் இரண்டு ஆசிரியைகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு ஆசிரியைகளும் மாகாண கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் இதுவரை அங்கு பணிக்குச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை அதிபரிடமிருந்து முதற்கட்ட விசாரணை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.



அத்துடன், பாடசாலையின் மாணவர் தலைவர் சபை கலைக்கப்பட்டுள்ளது. தலைமை மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான முறையற்ற நடத்தைகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பாடசாலை நிர்வாகம் உள்வாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button