இலங்கையில் இடம்பெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டிநுழைவுச் சீட்டுக்கள் ஒரு இலட்சம் ரூபாய் வரை இணையத்தளத்தில்கருப்புச் சந்தையில்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் T20 கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டி நிபந்தனைகளுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 15 ஆம் திகதி இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்தியா பாகிஸ்தான் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டுக்கள் ஒரு இலட்சம் ரூபாய் வரை இணையத்தளத்தில், கருப்புச் சந்தை மூலம் விற்பனையாவதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த கருப்புச் சந்தை நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்தியர்கள் இந்தக் கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கும் பொருட்டு இலங்கை வருவதற்கான விமானப் பயணச் சீட்டு குறிப்பாக சண்டிகார் – கொழும்பு, டெல்லி – கொழும்பு, மும்பை – கொழும்பு, சென்னை – கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமானப் பயணச் சீட்டின் விற்பனை விலை இக்காலப் பகுதியில் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, இந்தியா பாகிஸ்தான் T20 உலகக்கிண்ணப் போட்டிக்காக கொழும்பில் அதிவிசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிரிக்கெட் விளையாட்டு நட்புறவையும் ஒத்துழைப்பையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும வளர்க்கும் ஒரு முக்கிய மேடையாக உள்ளதாக அரசாங்கம் கருதுகிறது



