News
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் இளைஞன் அல்ல… 17 வயது சிறுவன் என உறுதியானது

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 17 வயது சிறுவன் என உறுதியாகியுள்ளது.
நேற்று முன்தினம் (10) பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தியமைக்காக குறித்த வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் இளைஞனா, சிறுவனா என்ற சந்தேகம் எழுந்து வந்தநிலையில், உயிரிழந்தவருக்கு நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாகவுள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களும் என உறுதியாகியுள்ளது



