News

கையில் வித்தியாசமான கல்லை கொடுத்து கொள்ளை – கொழும்பில் பதிவாகும் சம்பவங்கள்

By : மிஸ்பாஹுல் ஹக் கொழும்பில் முதியவர்களை மயக்கமடையச் செய்து அவர்களது தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் மோசடி அம்பலமாகி உள்ளது.

மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, குட்டையான தோற்றமுடைய வயதான பெண் ஒருவர் அவரை அணுகி, தனது கணவர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்வதாகக் கூறி, சிறிய காகிதம் ஒன்றில் சுற்றப்பட்ட இரண்டு கற்களை அந்த மூதாட்டியின் கையில் கொடுத்துள்ளார்.

அந்தக் கற்களைக் கையில் வாங்கி மூதாட்டி பார்த்த போதே, அவர் சுயநினைவை இழந்துள்ளார். மீண்டும் அவர் தெளிவடைந்தபோது, அங்கிருந்த அந்த பெண் காணாமல் போயுள்ளார். மூதாட்டியின் தங்கச் சங்கிலியும் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இதேபோன்ற பாணியில் மக்கள் ஏமாற்றப்பட்ட 153வது சம்பவம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெரியாத நபர்கள் வீதிகளில் பேச முற்படும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button