News

பாடசாலை மதில் சுவரில் டோசர் மோதியதில் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் காயம் – கொழும்பு, பொரளையில்  சம்பவம்

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாதுகாப்புச் சுவரில் மண் தள்ளும் இயந்திரம் ஒன்று மோதியதில் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ் விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூன்று மாணவர்களுள் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் டோசர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button