பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரி, மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா, புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10A(1)(a) இன் கீழ், கொழும்பு மாநகர சபையின் திருமதி முகமது புஹாரி பாத்திமா சொஹாரா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டதால், மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் தேர்தல் அதிகாரியான பியூமி அட்டிகல கையொப்பத்தில் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில், கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக தன்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.




