News

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பால், இலங்கை துரித அபிவிருத்தியையும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும் அடைந்து கொள்ளும் ; IMF இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்கியது

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பானது, இலங்கை துரித அபிவிருத்தியையும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும் அடைந்துகொள்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்தார்.

இந்நாட்டில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து செவ்வாக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button