மேற்குக்கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத இருப்பை விரிவுபடுத்தும் ஆக்கிரமிப்பை வன்மையாக எதிர்த்து 85 நாடுகள் இணைந்து அறிக்கை விட்டன – அதில் இலங்கை இணையவில்லை

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலின் நடைமுறை விரிவாக்கத்தைக் கண்டித்துள்ள 85 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளில் இலங்கை இடம்பெறவில்லை.
நாடுகள் மற்றும் அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய மூன்று உலகளாவிய குழுக்களின் கூட்டு அறிக்கையை ஐநாவுக்கான பாலஸ்தீனிய தூதரகம் தனது சமூக ஊடக கணக்குகளில் பதிவிட்டுள்ளது.
அல்ஜீரியா, அண்டோரா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பங்களாதேஷ், பெலாரஸ், பெல்ஜியம், பிரேசில், புருனே தருசலாம், கனடா, சாட், சீனா, கொலம்பியா, கியூபா, சைப்ரஸ், ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, டென்மார்க், ஜிபூட்டி, எகிப்து, எல் சால்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கயானா, ஐஸ்லாந்து, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், குவைத், கிர்கிஸ்தான், லாட்வியா, லெபனான், லைபீரியா, லிச்சென்ஸ்டைன், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மாலைத்தீவு, மால்டா, மொரிட்டானியா, மொரிஷியஸ், மெக்சிகோ, மொரோக்கோ, மொசாம்பிக், நமீபியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, போர்ச்சுகல், கத்தார், கொரிய குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, சான் மரினோ, சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி, சவுதி அரேபியா, செனகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சூடான், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, சிரியா, தஜிகிஸ்தான், காம்பியா, துர்க்கியே, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தான்சானியா ஐக்கிய குடியரசு, ஐக்கிய இராச்சியம், உருகுவே, வனுவாட்டு, வெனிசுலா, ஏமன் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
“மேற்குக்கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இஸ்ரேல் எடுக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய முடிவுகள் சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் கடமைகளுக்கு முரணானவை மற்றும் உடனடியாக மாற்றப்பட வேண்டும். இது தொடர்பாக எந்த வடிவத்திலான இணைப்பிற்கும் எங்களது வலுவான எதிர்ப்பை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


