நாங்கள் ஈரானின் ஏவுகணைகளையும், ஏவுகணைத் தொழிற்துறையையும் தரைமட்டமாக்கி முற்றிலுமாக நிர்மூலமாக்கி விட்டு அவர்களின் கடற்படையையும் நாங்கள் அழிப்போம் ; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

நாங்கள் ஈரானின் ஏவுகணைகளை அழிப்பதுடன், அவர்களின் ஏவுகணைத் தொழிற்துறையைத் தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும்.அத்துடன் அவர்களின் கடற்படையையும் நாங்கள் அழிப்போம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ஈரானின் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ‘பூரண உடல்நலத்துடன்’ இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டதால் அவரது பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்திருந்தது.
இதேவேளை, ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களையடுத்த, தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது.



