வீட்டில் பெட்ரோல் ஷெட் ஒன்றை நடத்தி வந்த பெண் கல்முனை பொலிஸ் பிரிவில் கைது

பாறுக் ஷிஹான் வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸார் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெற்றோல் எரிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு நாளை (09) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



