அமெரிக்காவுடன் மோதுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – உங்களுக்கு செய்ய முடியாவிட்டால் எங்கேளிடம் தந்துவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள். எமக்கு அந்த சக்தி இருக்கிறது ; SJB உறுப்பினர் சமிந்த விஜேசிறி

அமெரிக்காவுடன் மோதுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – முன்னாள் MP சமிந்த விஜேசிறி
தற்போதைய அரசாங்கம் அமெரிக்கா உள்ளிட்ட பலம் வாய்ந்த நாடுகளுக்கு முன்னால் பலவீனமான கொள்கையையே பின்பற்றுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச அழுத்தங்களுக்கு முன்னால் நேரடியாக நிற்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக வலியுறுத்தினார்.
“எந்தவொரு நாட்டுடனும் இதனை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும்”
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விஜேசிறி மேலும் கூறியதாவது:
“அமெரிக்காவுடன் மோதுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. இதனை செய்ய முடியாவிட்டால் வீட்டிற்கு செல்லுங்கள். எமக்கு அந்த சக்தி இருக்கிறது.
எந்தவொரு நாட்டுடனும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை நாம் கூறுகிறோம்.”



