தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில் தொடர்வது அர்த்தமற்றது எனவும், தமது தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள சுதந்திரம் அளித்து, கருத்து வேறுபாடுள்ள உறுப்பினர்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த மேன்முறையீடுகளை அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலேயே நான்கு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது