News
நான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் ; அலி சப்ரி அறிவிப்பு – ஆனால் எப்போதும் போல் தொடர்ந்தும் இந்த நாட்டின் மக்களின் பிரச்சினைகளுக்காக முன்னின்று உதவுவேன்

தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரு சட்டத்தரணியாக நாட்டின் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்தும் முன்னின்று உதவப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதற்கு எந்தவொரு சாட்சியமும் இல்லையெனவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
“இவை அப்பட்டமான பொய்கள். அனைத்தையும் ஒரு வேடிக்கையாக மாற்றியுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.



