News

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற ‘எதிரி’ கப்பல்களைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை – அதேவேளை இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்களை அனுமதிக்கிறோம் ; அப்பாஸ் அராக்ஷி U. N இடம் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரி’ கப்பல்களைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்று ஈரான் தெரிவித்துள்ளது.



ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸூடுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இதனை தெரிவித்துள்ளார்.



ஒரு கடற்கரை நாடு என்ற அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எதிரிக் கப்பல்களைத் தடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு உண்டு.



இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகளே காரணம்.



அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும்.



ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படவில்லை.



சில நட்பு நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நீரிணையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரிடம் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button