News

வாக்குறுதியளித்தவாறே எவ்வித சலுகைகளையும் பெற்றுக்கொள்ளாது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளோம்.

தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தவாறே, தமது அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித சலுகைகளையும் பெற்றுக்கொள்ளாது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், அவர்கள் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் வசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தெரண வாதபிட்டிய” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ருவான் மாபலகம இதனைத் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள் போன்ற பாராளுமன்ற உறுப்பினர் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளாமல் ஏன் செயற்படவில்லை என ‘சர்வஜன பலஸ்தீன் ‘ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பிரியங்கர மஹகம்முல்லகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மஹகம்முல்லகே, மாதிவெல பாராளுமன்ற குடியிருப்பு என்பதும் ஒரு பாராளுமன்ற சலுகையே என்றும், அது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படுகிறதே தவிர மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Recent Articles

Back to top button