News

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எதிராக மிகக் கடுமையான உத்தரவைப் ஒன்றை பிறப்பித்துள்ள அபூர்வ நிகழ்வு

✍️ முகிந்தன் துரைராஜசிங்கம்

சர்வதேச அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எதிராக மிகக் கடுமையான உத்தரவைப் ஒன்றை பிறப்பித்துள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப், “இஸ்ரேல் இனி லெபனான் மீது குண்டு வீசாது. அமெரிக்காவால் அவர்கள் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்தது போதும் (Enough is enough!!!)” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தன்னை தந்திரமாகப் போருக்குள் இழுத்துவிட்டதாக ட்ரம்ப் கருதுகிறார். போருக்குள் தந்திரமாக தன்னை இழுத்துவிட்டதற்காக இஸ்ரேலை ட்ரம்ப் பழிவாங்குவார் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது போலவே, தற்போது அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

லெபனான் விவகாரத்தில் அமெரிக்காவின் சொல்லை மீறி இஸ்ரேல் செயல்படுவதால், ட்ரம்ப் தற்போது இஸ்ரேலுக்கு வழங்கிய “Blank Cheque ” ஆதரவை ரத்து செய்துள்ளார்.

இதன் விளைவாக, அமெரிக்க மக்களிடையே இஸ்ரேலுக்கு எதிரான ஒரு கடுமையான எதிர்ப்பு அலை உருவாகத் தொடங்கியுள்ளது. இன்று உலக அளவில் இஸ்ரேல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக (Pariah State) மாறி வருவதோடு, அமெரிக்க மக்களின் கடும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இஸ்ரேலின் அணுசக்தி கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் முன்னாள் அமெரிக்க அதிபர் John F Kennedy .

இஸ்ரேலின் “டிமோனா”அணு உலை திட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். இதுவே அவர் படுகொலை செய்யப்பட்டதற்குக் பிரதான காரணமாக அமைந்தது.

இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை கென்னடி கடுமையாக எதிர்த்து டிமோனா அணு உலையை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் நெதன்யாகுவின் முன்னோடிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

மத்தியகிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என இஸ்ரேல் அணு ஆயுதங்களை உருவாக்குவதை கென்னடி விரும்பவில்லை.

இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தை முடக்க நினைத்ததால் தான் கென்னடி படுகொலை செய்யப்பட்டார் .

கென்னடியின் மறைவுக்குப் பிறகு, Lindon B Johnson அதிபரானார். இவர் இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தார். அவர் ஒரு “பொம்மை” (Puppet) போலச் செயல்பட்டு, இஸ்ரேல் இன்று ஒரு அணு ஆயுத வல்லரசாக மாற வழிவகுத்தார்.

கெனடி முதல்ல இராஜிவ் காந்தி வரை இஸ்ரேலின் திட்டங்களை எதிர்த்தவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போனதே வரலாறு.

தற்பொழுதும் கூட இஸ்ரேலின் விரிவுபடுத்தப்பட்ட தேசக் கனவான ‘Greater Israel திட்டத்திற்கு அமெரிக்கா ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Greater Israel  திட்டத்திற்கு ஒரு தடையாக யார் இருந்தாலும், அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது வரலாற்றில் தொடர்ந்து நடக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்  இதுவரை காலமும் இஸ்ரேலுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டாலும், தற்போது அவர் “தன்னை இஸ்ரேல் ஏமாற்றிவிட்டது” என்பதை உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது அவர் Greater Israel திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக மாறும்போது, அவருக்கும் கென்னடிக்கு நேர்ந்த கதியே ஏற்பட போகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.

“சில நேரங்களில் பொம்மைத் தலைவர்களாக இருப்பவர்களுக்குத் தாம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறோம் என்ற உண்மை உறைக்கும்போது, அவர்களின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது. அப்படி அவர்கள் அந்தத் திட்டங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, அவர்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்படுகிறார்கள் அல்லது அழிக்கப்படுகிறார்கள்.”

அமெரிக்க அதிபர்கள் பெரும்பாலும் இஸ்ரேலிய ஆதரவு சக்திகளால் இயக்கப்படும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள்.

ஆனால், சில நேரங்களில் அந்தப் பொம்மைகளுக்கு ‘மனசாட்சி’ (Conscience) விழித்துக்கொள்ளும் போது, அவர்கள் தங்களின் எஜமானர்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள் .

அப்படித் திரும்பிய கென்னடி கொல்லப்பட்டது போல, தற்போது ட்ரம்ப் எடுத்துள்ள “Enough is Enough” நிலைப்பாடு அவருக்கு ஆபத்தாக முடியப் போகின்றது.

அதிபர்கள் எப்போதுமே ஒரு பெரிய வலைப்பின்னலின் கைதிகளாகவே இருக்கிறார்கள். எப்போது ஒரு ‘பொம்மை’ தனது சரடுகளை அறுத்துக்கொண்டு சுயமாகச் சிந்திக்கத் தொடங்குகிறதோ, எப்போது அவர்களின் ‘மனசாட்சி’ விழித்துக் கொள்கிறதோ, அப்போதே அவர்களின் ஆயுட்காலம் குறிக்கப்படுகிறது, சடுதியாக குறைக்கப்படுகிறது.

இஸ்ரேலின் தந்திரங்களை வெளிப்படையாகப் பேசத் துணிந்துள்ள ட்ரம்ப், ஒருவேளை அந்தப் பழைய கெனடியின் வரலாற்றை மீண்டும் ஒருமுறை நிகழ்த்தப்போகிறாரா?

அல்லது ட்ரம்ப்பை அகற்றிவிட்டு, தங்களுக்கு அடங்கிப் போகும் புதியதொரு பொம்மையை இஸ்ரேல் அரியணையில் அமர்த்துமா?

எது எப்படியோ, அமெரிக்காவின் இந்தத் திடீர் மாற்றம் ஒரு அமைதிக்கான அறிகுறி அல்ல, மாறாக, ஒரு மிகப் பெரிய சூறாவளிக்கு முன்னால் நிலவும் நிசப்தம் இது.

காலம் பதில் சொல்லும்… ஆனால் அந்தப் பதில் மிகவும் பயங்கரமானதாக இருக்கலாம்!

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button