சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் விபத்துக்களில் 80 பேர் உயிரிழப்பு

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் மாத்திரம் 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளிலேயே அதிகளவான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்

