News

கிலோ 240 ரூபாவுடைய சம்பா அரிசியை 285 ரூபாவிற்கு விற்பனை செய்த கொழும்பு வர்த்தகருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கபட்டது

கொழும்பு 11இல் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரி ஒருவருக்கு ரூபா 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.



குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ் விடயம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.



அதிகபட்ச சில்லறை விலையான கிலோ ரூ 240 கொண்ட 5 கிலோ சம்பா அரிசி, நுகர்வோருக்கு ரூ 1425இற்கு அதாவது, ஒரு கிலோ ரூ 285 இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.



இச் சம்பவம் தொடர்பில் நேற்று (28) குறித்த வியாபாரி மீது மாளிகாககந்த நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் விற்பனையாளருக்கு ரூ 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button