News

விஜய்யின் TVk விற்கு 118 MLA ஆதரவு இருந்தால் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தயார் – இல்லாவிட்டால் முடியாது (மத்திய அரசின் கீழ் உள்ள) ஆளுநர் மாளிகை அறிவித்தது

118 பேர் ஆதரவு இருந்தால் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தயார் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக 108 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உரிமை கோரி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டுவதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியிலும் கட்சி ஈடுபட்டுள்ளது

தற்போது காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும், மொத்த எண்ணிக்கை 112 ஆகவே உள்ளது. ஆட்சியை அமைக்க இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால், அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேற்று தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் , ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். அப்போது, 112 எம்.எல்.ஏ ஆதரவு இருப்பதாகவும், அதனடிப்படையில் முதலமைச்சராக பொறுப்பேற்று சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை எண்ணிக்கையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியல் இல்லாமல், 112 உறுப்பினர்களின் விவரங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மீதமுள்ள ஆதரவு தொடர்பான முழுமையான தகவல்களையும் வழங்குமாறு ஆளுநர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீண்டும் தவெக தலைவர்கள் ஆளுரை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீடித்த்தாக கூறப்படுகிறது. ஆளுநருடன் என்ன மாதிரியான சந்திப்பு நடந்தது என எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து ஆளுநர் மாளிகை  விளக்கம்.


மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது,


தவெக விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசனிடம் ஆளுநர் மாளிகை கருத்து கேட்டதாக தகவல்.


மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் தனது கருத்துகளை ஆளுநர் மாளிகைக்கு வழங்கியதாகவும் தகவல்.


மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுந்தரேசன் கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவு
108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக வந்து தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது தவெக
கூட்டணி என குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்.


தாங்கள் தான் தனிப்பெரும் கட்சி என கூறி ஆட்சி அமைக்க தவெக உரிமை கோரவில்லை
கூட்டணியுடன் வந்துள்ளதால் வேறு எந்த கட்சிகள் தவெகவை ஆதரிக்க உள்ளன என கேட்டுள்ளோம்
நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் முடிவு.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button