News

எம்மை விட்டு விலகிச் சென்ற பெருமளவிலான மக்கள் இன்று மீண்டும் எங்களுடன் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் என நாமல் அறிவிப்பு

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியாயின், தரமற்ற நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்தவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கஸ்பேவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:

“நிதி அமைச்சின் 800 மில்லியன் ரூபாயைத் தவறான கணக்கிற்கு மாற்றியவர்களை விசாரணை செய்யுங்கள். பொய் சாட்சி சொல்லுமாறு வற்புறுத்தி, சந்தேகநபர்களைத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுபவர்களை விசாரணை செய்யுங்கள். அத்துடன், உலகிலேயே அதிக விலை கொடுத்து எரிபொருளைக் கொள்வனவு செய்தவர்களையும் விசாரணை செய்யுமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

கடந்த காலத் தேர்தல்களில் எம்மை விட்டு விலகிச் சென்ற பெருமளவிலான மக்கள் இன்று மீண்டும் எங்களுடன் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதோடு, அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button