News

இந்த மாதம் 27ஆம் திகதிக்கு பின் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் இந்த 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பணிப்பாளர் சபை நமக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் என நம்புகிறோம். அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த வருடத்திற்குள் 480 மில்லியன் டொலர்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும், அதன் அணுக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து 50 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளன. எனவே, இதனை மேலாண்மை செய்வதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது.”

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button