News

453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை தங்குமிடத்தில் வைத்திருந்த நபர் வெள்ளவத்தைப் பகுதியில் கைது

போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, வெள்ளவத்தைப் பகுதியில் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கும் இடமொன்றைச் சோதனையிட்டபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய, தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவராவார்.

இந்த போலி டொலர் நோட்டுகள் சந்தேகநபருக்கு எப்படிக் கிடைத்தன, மற்றும் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளனவா என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button