News
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாததால் தான் நாட்டில் ரூபாய் பெறுமதி கட்டுப்பாடின்றி வீழ்ச்சியடைகிறது ; UNP

(எம்.ஆர்.எம்.வசீம்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தவறியமையே ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ரூபாய் கட்டுப்பாடின்றி வீழ்ச்சியடைவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய விதமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது



