நேற்று 354 ரூபாவாக இருந்த அமெரிக்க டாலர் பெறுமதி இன்று 340 ரூபாயாகக் குறைந்தது

இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளதுடன், வர்த்தக வங்கிகள் விற்பனை வீதத்தை இன்று காலை நிலவிய 350 ரூபாயிலிருந்து 340 ரூபாயாகக் குறைத்துள்ளன.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் முறையே 342.75 ரூபாயிலிருந்து 329.25 ரூபாயாகவும், 354.75 ரூபாயிலிருந்து 347 ரூபாயாகவும் மேலும் குறைந்துள்ளன.
என்.டி.பி வங்கியல், அமெரிக்க டாலரின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் முறையே 341 ரூபாயிலிருந்து 330 ரூபாயாகவும், 351 ரூபாயிலிருந்து 340 ரூபாயாகவும் மேலும் குறைந்துள்ளன.
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டாலரின் கொள்வனவு வீதம் 343.95 ரூபாயிலிருந்து 330.06 ரூபாயாக மேலும் குறைந்துள்ளதுடன், விற்பனை வீதமும் 354.24 ரூபாயிலிருந்து 340.11 ரூபாயாக மேலும் குறைந்துள்ளது.
இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் முறையே 343.09 ரூபாயிலிருந்து 331.42 ரூபாயாகவும், 354.25 ரூபாயிலிருந்து 342.50 ரூபாயாகவும் குறைந்துள்ளன.
சம்பத் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் முறையே 343.50 ரூபாயிலிருந்து 331.50 ரூபாயாகவும், 352.50 ரூபாயிலிருந்து 340.50 ரூபாயாகவும் மேலும் குறைந்துள்ளன.



