News
பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
மாத்தறை ப்ரவுன்ஸ் ஹில் இல் சட்டவிரோத காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் ஆஜராகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



