News
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.சி. றிஸ்வான், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நிறுத்தப்பட்டார்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.சி. றிஸ்வான், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 22ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு தொலைநகல் மூலம் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதி ஏ.சி. றிஸ்வானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(பாறுக் ஷிஹான்)



