கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
கலாபூஷணம் பரீட் இக்பால்
கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். .
34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு பல முறைப்பாடுகளை கொடுத்தும் அவர்களுக்கான தீர்வை அவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை 09/09/2024 திங்கட்கிழமை காலை ஊடக சந்திப்பில் யாழ் முஸ்லிம் வட்டார சர்வதேச மனித உரிமைகள் பணிப்பாளர் ஆரிப் அப்துல் பரீட் அவர்கள் கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விடயம் சம்பந்தமாக பத்திரிகையாளர்களை ஒன்று கூட்டி விபரித்தார். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு தங்களின் அவல நிலைகளை பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சகல ஆவணங்கள் இருந்தும் அவர்களுடைய சொந்த இடத்துக்கு செல்ல முடியாத அவல நிலையை கண்ணீரோடு தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் போன்றவர்கள் இந்த ஏழைகளுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.