100 ஹாஜிகளுக்கு ஒரு டொய்லட்
மொத்த 3,500 இலங்கை ஹாஜிகளுக்கு இரண்டே இரண்டு buffet Service
இது எந்த வகையில் நியாயம்?
பொறுப்புக் கூறப் போவது யார்?
மினாவில் தற்போது தங்கியுள்ள 3,500 இலங்கை ஹாஜிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்ற குற்றஞ்சாட்டுக்களை அங்குள்ள ஹாஜிகள் முன்வைக்கின்றனர்.
இலங்கை 🇱🇰 ஹாஜிகளுக்கு மினாவில் சேவைகளை வழங்குவதற்காக Rehlat Wa Manafe Company For Tourism தெரிவுசெய்யப்பட்டிந்தது.
இந்த தெரிவு ஹஜ் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஹஜ் முகவர்களுடன் எந்தவித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சென்ற 3,500 ஹாஜிகளுக்கு 35 Toilet 🚽வசதிகளே குறித்த கம்பனியினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த Toilet வசதிக்குள் தான் குளிக்கும் 🚿 வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதென்றாகும்.
அதேநேரம், 3,500 ஹாஜிகளுக்கு இரண்டே இரண்டு buffet சேவைகள் மாத்திரமே குறித்த கம்பனியினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆண்களுக்கானது; மற்றையது பெண்களுக்கானதாகும்.
தற்போது மினாவிலுள்ள இலங்கை ஹாஜிகள் தெரிவித்த விடயங்களே இதுவாகும். இதன் மூலம் இலங்கை ஹாஜிகளுக்கு சேவை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளமை உறுதியாகின்றது.
இது எந்த வகையில் நியாயம்? பொறுப்புக் கூறப் போவது யார்??????



