கொலைக்குற்றம் தொடர்பில் நீதிமன்றில் மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட உடனேயே கையில் இருந்த விஷத்தை அருந்திய நபர் #இலங்கையில் இன்று பதிவான சம்பவம்

மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் விஷமருந்தி உயிர்மாய்ப்பு செய்ய முயற்சித்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (29) பகல் 12.30 மணியளவில் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் தொடர்பில் நபரொருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டபோது குற்றவாளி தன்வசம் வைத்திருந்த விஷத்தை அருந்தி உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி வழக்கில் குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (28) தனது வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர் விஷ மருந்து போத்தல் ஒன்றை கொண்டு வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

