News
IMF கடன் தவணைகள் இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்த போதிலும் இன்றும் ரூபாய் வீழ்ச்சி.. டாலர் மீண்டும் உயர்வு…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 324.45 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் விற்பனை விலை 334.24 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 434.70 ரூபாயாகவும், விற்பனை விலை 450.24 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 376.50 ரூபாயாகவும், விற்பனை விலை 390.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.



