News

பிரதி அமைச்சரின் மைத்துனர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது…

– ஸ்ரீநாத் பிரசன்ன ஜயசூரிய

2045 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை கைவசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் பிரதி அமைச்சர் ஒருவரின் மைத்துனர், திருகோணமலை தலைமையக காவல் துறை அதிகாரிகள் குழுவினால் 28ஆம் திகதி நள்ளிரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவராவார்.

திருகோணமலை தலைமையக காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே, அவர் பிரதி அமைச்சரின் மைத்துனர் என்ற தகவல் தெரியவந்துள்ளதாக அந்த உயர் காவல் துறை அதிகாரி மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட இளைஞருக்கு இந்த போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த தகவல்களை கண்டறியவும் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான இளைஞரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

– லங்கா தீப

Recent Articles

Back to top button