News

தன்சல் வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழப்பு – பலர் காயம் #கொழும்பு புறநகரில் சம்பவம்

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கார் ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.



விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.



சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.



இந்த கொடூர விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஹோமாகம பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் ஓட்டுநர், விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுநரை மீகொடை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button