News

மோசடி மன்னர் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய 2 பில்லியன் இந்திய ரூபாய் பணமோசடி வழக்கு தொடர்பில் இலங்கையை சேர்ந்த இந்திய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆதாரங்களுடன் சிக்கினார்

இந்திய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மோசடி மன்னர் என்று கூறப்படும் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய 2 பில்லியன் இந்திய ரூபாய் பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்தியாவின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பெர்னாண்டஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்வதற்கு முதற்கட்ட ஆதாரங்கள் (prima facie evidence) உள்ளதாக புது டெல்லியிலுள்ள பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பெர்னாண்டஸ் குற்றங்களைச் செய்துள்ளார் என்ற வலுவான சந்தேகத்தை எழுப்புவதற்குப் போதிய ஆதாரங்கள் கோப்புகளில் உள்ளன என்று அவதானித்த கூடுதல் அமர்வு நீதிபதி (ASJ) பிரசாந்த் சர்மா, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.

சந்திரசேகரின் குற்றப் பின்னணி பற்றி தெரிந்திருந்த போதிலும், அவரிடமிருந்து சுமார் 57.1 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான பரிசுகளை பெர்னாண்டஸ் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வருவாயைப் பயன்படுத்தி, அவரது உடன்பிறப்புகளின் வங்கித் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டதாகவும், அவரது பெற்றோருக்காக ஆடம்பர வாகனங்கள் வாங்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்ட ஒரு பலி ஆடு என்றும், இந்த மோசடியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பெர்னாண்டஸ் தொடர்ந்து வாதிட்டு வருகின்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button